“விஜய் மாமா காப்பாத்துங்க.. ஊரையே இடிக்குறாங்க” – முதல்வர் வாகனத்தை மறித்த சிறுவர்கள்! என்ன நடந்தது? | Vijay Uncle, Save Us– Local Residents Stop CM Vijay’s Vehicle Over Demolition Fears

Spread the love

Tamilnadu

oi-Vignesh Selvaraj

திருச்சி: தமிழக முதலமைச்சர் விஜய் இன்று திருச்சியில் இருந்து கார் மூலம் புதுக்கோட்டை சென்றபோது, அவரது காரை இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் வழிமறித்தனர். “விஜய் மாமா காப்பாத்துங்க.. ஊரையே இடிக்குறாங்க” என சிறுவர்கள் கூச்சலிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள செம்பட்டு பகுதியில் 3 தலைமுறையாக வசிப்பவர்களைக் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதை அடுத்து, திருச்சி வந்த முதல்வர் ஜோசப் விஜய் வாகனத்தை பொதுமக்கள் வழிமறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Vijay Uncle Save Us Local Residents Stop CM Vijay s Vehicle Over Demolition Fears

திருச்சி கிழக்கு தொகுதி செம்பட்டு என்.எம்.டி காலனி பகுதியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இயங்கி வந்த என்.எம்.டி தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களின் குடியிருப்புத் தேவைகளுக்காக, அந்தத் தொழிற்சாலைக்கு எதிரே இந்த இடம் ஒதுக்கப்பட்டது.

இந்த குடியிருப்பு பகுதியில் மூன்று தலைமுறைகளைக் கடந்து எவ்வித பாகுபாடுமின்றி, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தாங்கள் குடியிருந்து வரும் இந்த முழு இடத்தையும் சிலர் விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறி, அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 10 நாட்களுக்குள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் எனவும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையடுத்து, தங்களின் வாழ்விடத்தைக் காப்பாற்றக் கோரி, இன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்களை, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தங்களின் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் போர்டுகளை கைகளில் ஏந்தியும், தங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்டும் முழக்கங்களை எழுப்பினர். “விஜய் மாமா காப்பாத்துங்க.. ஊரையே இடிக்குறாங்க” என சிறுவர்கள் சிலர் கூச்சலிட்டனர்.

வாகனத்தை பொதுமக்கள் மறித்ததால் விஜய் கார் நிறுத்தப்பட்டது. அப்பகுதி மக்கள் அளித்த கோரிக்கை மனுவை முதல்வர் விஜய் பெற்றுக்கொண்டார். முதல்வரின் வாகனம் முற்றுகையிடப்பட்டதை அடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் உடனடியாக விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சாலையின் ஓரமாக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதல்வர் விஜய், கடந்த சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர் அவர் ராஜினாமா செய்த நிலையில் திருச்சி கிழக்கில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *