காதல் மனைவிமீது சந்தேகம், வீடு முழுக்க கேமரா; இரண்டு மகள்களைக் கொன்ற தந்தை

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா (48). இவர்களுக்கு 11 வயதில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதரிகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். பீகாரைச் சேர்ந்த சசி மருத்துகள் விற்பனை செய்யும் பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். சசி நீண்ட நாட்களாக தன் மனைவியின் நடத்தைமீது சந்தேகப்பட்டு வந்தார். இதுதொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதுண்டு. எனவே தன் மனைவியைக் கண்காணிக்க வீடு முழுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்கிறார்.

எப்போதும் இரண்டு மகள்களையும் சசி தனது பொறுப்பில் வைத்து வளர்த்து வந்தார். இரண்டு மகள்களும் இருக்கும் அறைக்குள் சசி தன் மனைவியை விடாமல் தானே வளர்த்து வந்தார். அதோடு மகனை நீ வளர்த்துக்கொள், நான் இரண்டு மகள்களையும் வளர்த்துக்கொள்கிறேன் என்று அடிக்கடி தன் மனைவியிடம் கூறி வந்தார்.

நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு சசி தன் மகள்களுடன் தனி அறைக்கு உறங்க சென்றார். நள்ளிரவில் ஒரு முறை எழுந்து ஒரு மகளை பாத்ரூம் அழைத்து சென்றுவிட்டு மீண்டும் அறைக்கு வந்த சிறிது நேரத்தில் அவர்களது வீட்டிற்கு போலீஸார் வந்தனர்.

போலீஸார் வந்தபிறகுதான் வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு மகள்களும் கழுத்தை அறுத்து கொலை செய்யபட்டு இருந்தது தெரிய வந்தது. சசி இரண்டு மகள்களையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தன் மகள்களை கொலை செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார். போலீஸார் இரண்டு சிறுமிகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு சசியைக் கைது செய்தனர்.

இது குறித்து சசி மனைவி ரேஷ்மா இது குறித்து கூறுகையில்,”‘அவருக்கு மன அழுத்தம் இருந்தது. நள்ளிரவில் ஒரு மகளை பாத்ரூம் அழைத்து சென்ற பிறகு மின் விளக்கை அணைத்துவிட்டார். ஆனால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் போலீஸார் வந்தனர்”என்றார். ரேஷ்மா மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். ரேஷ்மா பியூட்டி பார்லர் ஒன்றில் வேலை செய்த போது சசியை சந்தித்து காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *