காமன்வெல்த் விளையாட்டில் 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்த இந்தியா!| India finish Commonwealth Games 2026 in fourth place with 39 medals

Spread the love

கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நேற்றோடு (ஆகஸ்ட் 2 ) நிறைவடைத்துள்ளது. இப்போட்டி இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் விதமாக அமைந்துள்ளது.

இந்தியாவிலிருந்து 122 வீரர், வீராங்கனைகள் 13 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்ற நிலையில், மொத்தம் 39 பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் பதக்க வேட்டையில் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் குத்துச்சண்டை முக்கிய பங்காற்றின. இந்த இரு பிரிவுகளிலும் தலா 10 பதக்கங்கள் கிடைத்தன. பளுதூக்குதல் பிரிவில் 7 பதக்கங்களும், தடகளத்தில் 6 பதக்கங்களும் இந்தியாவின் கணக்கில் சேர்த்தன.

மொத்த பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் கடந்த காமன்வெல்த் போட்டிகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தனது நிலையை தக்க வைத்திருப்பதோடு, சில பிரிவுகளில் முன்னேற்றமும் அடைந்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *