“‘டெல்லி மாணவர்கள் போராட்டத்தை வழிநடத்தி முன்னெடுத்த காக்ரோஜ் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அமெரிக்காவிற்குச் சென்று படிக்க பணம் எப்படி கிடைத்தது? அவர் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுதான் இந்தப் போராட்டத்தை நடத்தினார்” என பா.ஜ.க-வினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர்.
அதைத் தொடர்ந்து, ஆர்.டி.ஐ ஆர்வலர் அமித் திவாரி, மகாராஷ்டிர தொழில்துறை வளர்ச்சிக் கழகத்தின் (MIDC) ஓய்வுபெற்ற இளநிலைப் பொறியாளரான தீப்கேவின் தந்தை பகவான்ராவ் தீப்கேவின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி மகாராஷ்டிர அரசு உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
மாதத்திற்கு சுமார் 60,000 முதல் 65,000 வரை சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியரால், தனது குழந்தைகளை உயர்கல்விக்காக அமெரிக்காவிற்கு எப்படி அனுப்ப முடிந்தது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த ஆர்.டி.ஐ குறித்து வீடியோ வெளியிட்ட அபிஜித் தீப்கே, “பாஜகவைச் சேர்ந்த ஒரு தொண்டர் என் மீது ஆர்.டி.ஐ தாக்கல் செய்திருப்பதை இப்போதுதான் பார்த்தேன். நான் எனது கல்வியை எவ்வாறு முடித்தேன் என்பதை அவர் தெரிந்துகொள்ள விரும்புகிறார்.
நான் என் கல்விச் சான்றிதழையும், கல்விக்கான உதவித்தொகைப் பெற்ற சான்றிதழையும் காட்டத் தயார்… அதேபோல உங்கள் பேரரசர் தன் உண்மையான டிகிரி சான்றிதழைக் காட்டுவாரா?