காரைக்குடி: காதலனின் நண்பனுடன் வெளியேறிய காதலி – கொலையில் முடிந்த முக்கோணக் காதல் கதை | Karaikudi: Friend Steals Girlfriend, Love Triangle Ends in Murder

Spread the love

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ் (32). இவர் காரைக்குடி அருகே ஓ.சிறுவயல் சாலையில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணும் திருமணமாகாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

சிறைச் சாலை நட்பு… சிதைந்த வாழ்க்கை!

சின்னராஜ் மற்றும் வெண்ணிலா மீதான கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருக்க, ஒரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் சின்னராஜ். அந்தச் சிறைவாசத்தின் போதுதான், ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த நம்பு முனீஸ்வரனுடன் இவருக்கு நட்பு மலர்ந்துள்ளது. சிறை தண்டனை முடிவிட்டு வெளியே வந்த பின்னரும் இந்த நட்பு தொடர்ந்திருக்கிறது.

வெளியில் உணவகத்தில் வேலை பார்த்து வந்த சின்னராஜ், தன் நண்பன் நம்பு முனீஸ்வரனை ஒருநாள் வீட்டுக்கு அழைத்து வந்து வெண்ணிலாவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஆனால், அந்த அறிமுகம் ஒரு கொடூர விபரீதத்திற்கு வழிவகுக்கும் என்பதை சின்னராஜ் ஆரம்பத்தில் அறியவில்லை. நம்பு முனீஸ்வரனுக்கும் வெண்ணிலாவுக்கும் இடையே இருந்த பழக்கம் நாளடைவில் எல்லை மீறிச் சென்றுள்ளது.

வெடித்த கோபம்… ஓடிப்போன ஜோடி!

தன் வீட்டிலேயே நண்பனும் காதலியும் நெருங்கிப் பழகுவதை அறிந்து அதிர்ந்துபோன சின்னராஜ், கடும் கோபத்தில் இருவரிடமும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்தத் தினசரித் தொல்லையால் வெறுத்துப்போன வெண்ணிலா, சின்னராஜை விட்டுவிட்டு நம்பு முனீஸ்வரனுடன் கைகோர்த்து ஓட்டம் பிடித்தார். இருவரும் தேவகோட்டையில் ஒரு வாடகை வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தனர்.

தன்னுடன் வாழ்ந்தவள் தன் கண்முன்னே நண்பனுடன் கைகோர்த்துச் சென்றதை ஏற்றுக்கொள்ள முடியாத சின்னராஜ், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்றார். ஒவ்வொரு இரவும் குடித்துவிட்டு அந்த செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தகராறு செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார். “உங்க ரெண்டு பேரையும் உயிரோட விடமாட்டேன், சீக்கிரமே தீர்த்துக்கட்டுறேன்” என்று தொடர்ந்து மிரட்டல்களையும் விடுத்து வந்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *