அதிமுகவை சேர்ந்த 25,000 முதல் 30,000 நிர்வாகிகளையும் தொண்டர்களையும் பெரிய விழா எடுத்து தவெகவில் இணைக்கிறேன் என்று கூறிதான் மரகதம் குமரவேல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஆட்சியமைத்த பிறகு முதல் முதலாக பிரமாண்டமான இணைப்பு விழா என்பதால் ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன் உட்பட இன்னும் சில அமைச்சர்கள் என பலரும் விழாவுக்கு வர ஒத்துக் கொண்டனர்.
கூட்டத்தை காட்ட நிகழ்வு நடந்த மைதானத்தில் 25,000 இருக்கைகளும் போடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் கூடவில்லை. பாதிக்கும் மேற்பட்ட சேர்கள் காலியாகவே கிடந்தன. அமைச்சர்கள் பேசும் போது கூடியிருந்த கொஞ்ச கூட்டமும் கலைந்து போக ஆரம்பித்தது. இதனாலயே அமைச்சர்கள் இரண்டே நிமிடத்தில் பேச்சையும் முடித்துக் கொண்டனர்.

முதல்வர் விஜய்யின் படத்தை வைத்து அமைச்சர்களெல்லாம் கூடி “அதிமுகவினர் அத்தனை பேரும் தவெக பக்கம் வந்துவிட்டார்கள்’ என பில்டப் கொடுத்த பிறகும் இணைப்பு விழாவில் கூட்டம் கூடவில்லை என்பதால் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் பலருமே அப்செட் என்கின்றனர். எதிர்க்கட்சியான திமுகவுமே காலி சேர்களின் வீடியோவை எடுத்து போட்டு தவெகவை ட்ரோல் செய்து வருகின்றனர்.