கால்பந்து திருவிழா! ஜெயிக்கப்போவது யாரு? – Kumudam

Spread the love

இந்த உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை சரிசமமாக முதல் இடத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள் கால்பந்து வல்லுநர்கள் இதில் உலகக் கோப்பைத் பிரான்ஸ் அணி, கடந்த தொடரில் இறுதிப் போட்டி வரை வந்து கோப்பையை நூலிழையில் தவறவிட்டது. அந்தத் தொடரில் அதிக கோல்களை அடித்த நட்சத்திர வீரரான எம்பாபே. அதே வீரியத்துடன் இருப்பது பிரான்ஸ் அணிக்கு மிகப் பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. கூடவே, மைக்கேல் ஒலிஸ். உஸ்மான் டெம்பல் போன்ற திறமையான வீரர்களும் பிரான்ஸ் அணிக்கு அரணாகத் திகழ்கிறார்கள்.

2024-ம் ஆண்டு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றதால். ஸ்பெயின் அணியின் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் லாமின் யமால் (Lamine Yamal), 18 வயதே ஆன இளம் புயல்! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயின் யூரோ கோப்பையை வென்றதில் முக்கியப் பங்கு வகித்தவர் இவர்தான் அடுத்த மெஸ்ஸி, ரொனால்டோவாக இவர் உருவெடுப்பார் என்ற பேச்சும் இருக்கிறது. யூரோ கோப்பையைப் போய் பெற்றுத் தரத் துடித்துக்கொண்டிருக்கிறது உலகக் கோப்பையையும் தனது அணிக்கு இந்த இளம் கன்று!

48 அணிகள் இந்த உலகக் கோப்பையை ஆடினாலும், பெரும்பாலான இந்திய ரசிகர்களின் ஆதரவு எப்போதும் பிரேசில் மற்றும் அர்ஜென்டீன அணிகளுக்குத்தான்! பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மார். காயமுற்றிருப்பதுதான் அவர்களின் வயிற்றைக் சுலக்குகிறது. முக்கியப் போட்டிகளுக்கு முன் அவர் குணமடைந்து விடுவார். என்ற நம்பிக்கையில் பிரேசில் ரசிகர்கள்இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் அர்ஜென்டீனா, கடந்த உலகக் கோப்பையை வென்ற கையோடு கால்பந்து விளையாட்டுக்கு விடை கொடுக்கத் தயாராக இருந்தார் மெஸ்ஸி. ரசிகர்களின் வேண்டுகோளால், தன் ஓய்வு அறிவிப்பைத் தள்ளிவைத்து, அர்ஜென்டீனாவுக்காக ஆடுகிறார்.

போர்ச்சுக்கல் அணியைச் சேர்ந்த ரொனால்டோதான் கால்பந்தின் சச்சின் டெண்டுல்கர் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனை இருந்தும், தன் நாட்டுக்கு ஓர் உலகக் கோப்பையை வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என ஏங்குகிறார். அதற்காக 41 வயதிலும் அணியோடு அமெரிக்காவுக்கு விமானம் ஏறுகிறார். சச்சினுக்கு எப்படி கடைசி உலகக் கோப்பை கைகொடுத்ததோ, அதேபோல் ரொனால் டோவையும் அவரது கடைசி உலகக் கோப்பைக் கை விடாது என்கிறார்கள் அவரது ரசிகர்கள் கால்பந்து ரசிகர்களின் கண்களுக்குக் கடந்த பல ஆண்டுகளாக விருந்தளித்து வந்த மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார். ஹாரி கேன் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை. இதில் வெற்றிக் களிப்போடு கால்பந்துக்கு குட் பை சொல்லி விடைபெறுகிறவர்கள் யார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *