கடந்த 16 ஆம் தேதி பணி முடிந்து ஓசூரிலிருந்து பேருந்தில் வந்து தன் கிராமத்தில் இறஙகியவர், இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக டிராவல் வேனில் வந்த மூர்த்தி என்பவர், “வீட்டில் இறக்கி விடுகிறேன், வேனில் ஏறவும்’ என்று அழைத்ததால், ஊர்காரர் என்ற நம்பிக்கையில் அப்பெண் ஏறியுள்ளார்.
ஆனால், டிரைவர் மூர்த்தி வாகனத்தை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தி அப்பெண்ணை கடுமையாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ரத்தப்போக்குடன் வாகனத்திலிருந்து குதித்து தப்பித்த பெண், வீட்டிற்கு வந்து தன் தாயாரிடம் நடந்ததைச் சொல்லி அழுதுள்ளார். அதைத் தொடர்ந்து பாகலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

வழக்கு பதிவு செய்த பாகலூர் காவல்துறையினர், தலைமறைவான மூர்த்தியை தேடி வந்த நிலையில், காவல் நிலையம் வந்த மூர்த்தி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே காவல்துறையினர் அவரை மீட்டு ஓசூர் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார் மூர்த்தி.