International
oi-Hema Vandhana
சியோல்: தென் கொரியாவின் சியோல் நகரை சேர்ந்த 20 வயது இளம்பெண் கிம் சோ-யங், இப்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இணைய உலகில் “மிக அழகான கொலையாளி” என்று வர்ணிக்கப்படும் இவர், டேட்டிங் ஆப் மூலம் ஆண்களை பழகி, அவர்களை கொடூரமாக கொலை செய்தவர் ஆவர்.. இப்போது மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். இந்த வழக்குதான், அந்நாட்டு சட்டத்துறையில் மிகப்பெரிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
கிம் சோ-யங் என்ற பெண்ணுக்கு சின்ன வயதிலிருந்தே காஸ்ட்லி வாழ்க்கை மீது மிகவும் பிரியம்.. எப்படியாவது ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைத்த கிம் சோ-யங், கடுமையாக உழைக்க தயாராகயில்லை.-

மிக அழகான கொலையாளி
தன் ஆசை உடனே நிறைவேற வேண்டுமானால் தவறான பாதையை தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்று முடிவு செய்தார்.. இதற்காக டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களை தொடர்புகொண்டார். அவர்களுடன் பழகி, நம்பகத்தன்மையை உருவாக்கினார். பிறகு அவர்களை நேரில் பார்க்க வரவழைப்பார்.. அப்போது அவர்களுக்கு வழங்கப்படும் கூல் டிரிங்ஸ்களில் போதை மற்றும் மனநல மருந்துகளை கலந்து தந்துவிடுவார்.
இதுபோல, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரி வரை மொத்தம் 6 ஆண்களுக்கு இந்த விஷ டிரிங்க்ஸை குடிக்க தந்துள்ளார்.. இதை குடித்து 2 பேர் இறந்துவிட்டார்கள். 4 பேர் உயிர் பிழைத்து சிகிச்சை பெற்றுள்ளார்கள்.. ஆனால், இந்த 4 பேருக்குமே ஒரே மாதிரியான உடல் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.. இந்த உடல்நல பாதிப்புகள்தான் கிம் சோ-யங்கை போலீசில் சிக்க வைத்தது.
சாட்ஜிடிபி தேடல்
இதுதொடர்பான வழக்கு விசாரணையும் சியோல் வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.. அப்போது, கிம் சோ-யங் பற்றி மேலும் பல தகவல்கள் வெளியாயின. அதாவது, கொலை செய்வதற்கு முன்பு, “மதுவில் தூக்க மாத்திரை கலந்தால் கண்டிப்பாக மரணம் ஏற்படுமா?” என்று சாட்ஜிபிடி (ChatGPT) யில் கிம் சோ-யங் தேடினாராம்.. இதன்மூலம் அனைத்து கொலைகளையும் திட்டமிட்டே செய்துள்ளார் என்பதும் உறுதியாகி விட்டது.
ஆரம்பத்தில் அவரது போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டதுமே, ஒருசிலர் ஓடிவந்து கிம் சோ-யங்குக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், அவரது கொடூரமான முகத்திரை கிழிந்ததும், மொத்த இணையவாசிகளும் அவரை விமர்சிக்கத் தொடங்கினர்.
மரண தண்டனை கிடைக்குமா
நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிடும்போது, “குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்குப் பிறர் மீது இரக்கமில்லாத மனநிலை உள்ளது. தான் செய்த குற்றத்திற்காக அவர் துளியும் வருத்தப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கிம் சோ-யங்குக்கு மரண தண்டனை வழங்கக் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிம் சோ-யங் தனது தரப்பு வாதத்தில், “அந்த ஆண்கள் என்னை தவறாக தொட முயன்றார்கள்.. அதனால்தான் அந்த பானங்களை குடிக்க கொடுத்தேன்” என்று கூறியுள்ளார்.
இருந்தாலும், அரசு தரப்பு முன்வைத்துள்ள ஆதாரங்கள் மற்றும் சாட்ஜிபிடி தேடல் விவரங்கள் என அத்தனை ஆதாரங்களும் கிம் சோ-யங் மீதான குற்றச்சாட்டை கன்பார்ம் செய்துவிட்டன..
திட்டமிடப்பட்ட கொலைகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக விரைவில் வெளியாகும் இந்த வழக்கின் தீர்ப்பு, தென் கொரியாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் குடும்பத்தினரே அவருக்கு மரண தண்டனையை கொடுத்து விடுங்கள் என்று கூறியிருப்பதால், நீதிமன்றம் என்ன தீர்ப்பு தரப்போகிறது என்று தெரியவில்லை…!!
