கிருஷ்ணகிரி: குடிநீர்த் தொட்டி, குழாய்களை திமுக பிரமுகர் உடைத்ததாகப் புகாரளித்த CPM நிர்வாகி கைது | Krishnagiri: CPM executive arrested for reporting DMK leader breaking water tank and pipes

Spread the love

இது குறித்து பெருமாள் தரப்பினர் மீது சாமல்பட்டி காவல் நிலையத்தில் இளவரசன் புகார் அளித்தார். அதேபோல தங்கள் ஊரிலுள்ள குடிநீர்க் குழாய்களை உடைத்ததாக பெருமாள் தரப்பில் கரடிக்கவுண்டனூரைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவரும் இளவரசன் மீது புகார் அளித்தார்.

கைது செயப்பட்ட சிபிஎம் நிர்வாகி

கைது செயப்பட்ட சிபிஎம் நிர்வாகி

இதையடுத்து மத்தூர் பி.டி.ஓ சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்து ஆய்வு செய்தார். குடிநீர்க் குழாய்கள் சரி செய்யப்பட்டது. பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததாக கே.எட்டிப்பட்டி ஊராட்சிச் செயலாளர் அளித்த புகாரின் பேரில் சாமல்பட்டி காவல்துறையினர் இளவரசன், ஜெயவேல் ஆகியோர் மீதும், பெருமாள் தரப்பில் அரசு, ஜெயசங்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் திமுக பிரமுகர் பெருமாள் மீது புகார் அளித்த இந்திய ஜனநயக மாவட்டச் செயலாளர் இளவரசனை இன்று காலை 5 மணிக்கு ஊத்தங்கரை காவலர்கள் கைது செய்தனர்.

‘இது அராஜகச் செயல், உடனே இளவரசனை விடுவிக்க வேண்டும்’ என்று கிருஷ்ணகிரி மாவட்ட சிபிஎம் கட்சியினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *