கிரெடிட் கார்டு பில் கட்டுபவர்களுக்கு RBI புதிய தளர்வு|Missed Credit Card Due Date? RBI Offers Big Relief

Spread the love

டியூ தேதி முடிந்தும் கிரெடிட் கார்டு பில் கட்டவில்லை என்றால், லேட் பேமெண்ட் உள்ளிட்ட அபராதம் பொதுவாக எகிறிவிடும்.

இதைத் தளர்வுப்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி புதிய நடைமுறை ஒன்றை அறிவித்துள்ளது.

புதிய நடைமுறையின் படி, கிரெடிட் கார்டு டியூ தேதி முடிந்த அடுத்த மூன்று நாள்களுக்கு எந்த அபராதமும், லேட் பேமெண்ட்டும் இல்லாமல், பில்லைக் கட்டிக்கொள்ளலாம்.

மூன்று நாள்களைத் தாண்டினால்தான், லேட் பேமெண்ட் கட்டணம் உள்ளிட்ட அபராதங்கள் பாயும்.

Credit Card - கிரெடிட் கார்டு

Credit Card – கிரெடிட் கார்டு

அபராதம் எப்படி கணக்கிடப்படும்?

மேலும், லேட் பேமெண்ட் கட்டணம் மொத்த கிரெடிட் கார்டு பில்லுக்கும் வசூலிக்கப்படாது. அதாவது, டியூ தேதிக்கு முன்னரே, நீங்கள் பகுதி பில்லைக் கட்டியிருக்கலாம்.

டியூ தேதி + மூன்று தேதிகளுக்குப் பிறகும், மீதி தொகையைக் கட்டவில்லை என்று வைத்துக்கொள்வோம்.

இந்தச் சூழலில், எத்தனை ரூபாய் பாக்கி தொகையைக் கட்டவில்லையோ, அதற்கு மட்டுமே லேட் பேமெண்ட்டை வசூலிக்க வேண்டும். மொத்த கிரெடிட் கார்டு பில் தொகைக்கும் லேட் பேமெண்ட் வசூலிப்பது புதிய தளர்வின் படி கிடையாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *