புதிதாக வந்துள்ள மாடல்களுக்கு மதுரையில் எந்தளவு வரவேற்பு உள்ளது என கேட்டோம், “கிளாசிக், புல்லட், ஹண்டர் இவைதான் மதுரைக்குள் அதிக விற்பனை. கிராமப்புற மக்கள் பெரும்பாலும் புல்லட்டை தான் விரும்புகிறார்கள். மொத்தம் ராயல் என்ஃபீல்டில் 14 மாடல்கள் உள்ளது.
அனைத்தின் டெஸ்ட்டெட் வாகனங்களும் நம்ம ஷோரூம்ல இருக்கு. ஒவ்வொரு புது மாடல் வரும் பொழுதும் நாங்கள் ஈவண்ட் நடத்தி மக்கள் மத்தியில் அதனை கொண்டு சேர்த்து விடுவோம், அதுபோக மக்களும் இந்த மாடல்கள் பற்றி அப்டேட் ஆகத்தான் இருக்கிறார்கள்.
மதுரை மக்கள் கரில்லா, பியர், ஹண்டர் என புது மாடல்களில் புது கலர்ஸ் தேடியும் வருகிறார்கள்” என்றவரிடம் ராயல் என்ஃபீல்டில் மின்வாகனம் பற்றி கேட்டோம், “ஃபிளையிங் ஃப்ளீ (Flying Flea) இந்த மாதம் தான் நான் அறிமுகப்படுத்தியுள்ளனர் இது உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட மாடலின் அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய எலக்ட்ரிக் இன்ஸ்பிரேஷன்.

இது இந்தியாவிலேயே பெங்களூரு ஷோரூம் இல் வந்துள்ளது. அதன் விற்பனையை பொறுத்து மற்ற நகரங்களிலும் வந்துவிடும். அடுத்ததாக ஹிமாலயன் மாடலிலும் EV வர இருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எப்போதும் அந்தந்த தலைமுறையை பொறுத்தே வாகனங்களை தயாரிப்பார்கள் அந்த வகையில் இன்னும் நிறைய எலக்ட்ரிக் வாகனங்கள் வரும். அவை மக்களுக்கு பிடித்ததாகவும் ஏற்றதாகவும், பெட்ரோல் ராயல் என்ஃபீல்டின் அனைத்து சிறப்பம்சங்களுக்கும் ஈடு கொடுக்கும் விதத்தில் நிச்சயம் இருக்கும்” என்றார்.
மற்ற நிறுவனங்களும் லாங் ரைட், க்ரூசர் என ராயல் என்பீல்டுக்கு ஈடு கொடுக்கும் விதமாக மாடல்களை தயாரிக்கின்றனர், இதனால் இதன் விற்பனையில் மாற்றம் உள்ளதா? “ராயல் என்பீல்டில் அட்வென்சர், சிட்டி ரெய்டு, ஃபேமிலி பிரெண்ட்லி, லாங் க்ரூசிங், மட் டெர்ரைன் ஆஃப் ரோட், என ஒவ்வொரு கான்செப்ட்டிற்க்கும் ஏற்றார் போல என்ன தேவை என்பதை புரிந்து, இதர உபகரணங்களுடன் (Accessories) சேர்த்து டெஸ்ட் செய்யப்பட்ட விதவிதமான வாகனங்கள் உள்ளது.
இந்தியா முழுக்க ஒவ்வொரு 30-45 கிமீ ஒரு சர்வீஸ் சென்டர் உள்ளது. மற்ற நிறுவனங்களை ஒப்பிடும் அளவில் வாகனங்கள் தயாரித்தாலும், ராயல் என்ஃபீல்டு அளவிற்கு ஒரு ரைடரை கன்வின்ஸ் செய்ய முடியாது. எனவே மற்ற நிறுவன மாடல்களின் வருகையால் RE க்கு எந்த பாதிப்பும் இல்லை”.