கிளம்புங்க.. கிளம்புங்க! தாராபுரத்தில் டெண்ட் போட்ட அரசியல் தலைகள்! நள்ளிரவில் விரட்டி விட்ட போலீஸ்! | Dharapuram Bypoll: Police Raid Lodges to Remove Outstation Political Supporters

Spread the love

Tamilnadu

oi-Rajkumar R

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடைந்தது. மேலும், தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதிக்கு வெளியூர்களில் இருந்து வந்து தங்கியிருக்கும் அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையாக லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

தாராபுரம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.க., அ.தி.மு.க., தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 22 பேர் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

by election 2026 TVK Dharapuram Madurantakam

இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி தொகுதிக்கு வெளியூர்களில் இருந்து பிரசாரத்திற்காக வந்தவர்கள் தாராபுரத்தில் உள்ள லாட்ஜ்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் தங்கியுள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்மாவதி லாட்ஜ், அமராவதி லாட்ஜ், அம்மன் லாட்ஜ், சுவாதி லாட்ஜ், அம்பிகா லாட்ஜ் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் போலீசார் 10 குழுக்களாகப் பிரிந்து, பல்வேறு லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்குச் சென்று அங்கு தங்கியிருந்தவர்களின் விவரங்களை ஆய்வு செய்தனர். வெளியூரைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்தால், தேர்தல் விதிமுறைகளின்படி அவர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், தொகுதிக்கு வெளியூர்களில் இருந்து வந்து தங்கியிருக்கும் அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இரவு 11 மணிக்கு மேல் தாராபுரம் பகுதியில் உள்ள லாட்ஜ்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் மீண்டும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளை முன்னிட்டு, பணப்பட்டுவாடா, விதிமீறல்கள் மற்றும் வெளியூர் நபர்களின் நடமாட்டம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வகையில் தாராபுரம் தொகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *