“ஜெனரேட்டர்களை இயக்கிக்கொள்ளுமாறு உயர் அழுத்தத் தொழில் நிறுவனங்களை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) அறிவுறுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” தமிழகத்தில் இரவு நேரங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் சொந்தமாக ஜெனரேட்டர்களை இயக்கிக்கொள்ளுமாறு உயர் அழுத்தத் தொழில் நிறுவனங்களை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) அறிவுறுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

புதிய ஆட்சி, சிறந்த நிர்வாகம் என வாய்ஜாலம் காட்டிய தவெக அரசால் அரசால், மின் பற்றாக்குறையைக்கூடச் சமாளிக்க முடியவில்லை. முன்கூட்டிய திட்டமிடல் துளியும் இன்றி, தமிழகத்தைத் தொழில் முடக்கத்திற்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கும் தள்ளிவிட்டதே திரு. விஜய் அவர்களது அரசின் நிர்வாகத் தோல்விக்கு அப்பட்டமான சான்றாகும்.
மின்சார வாரியத்தின் மின்சாரம் யூனிட்டுக்கு ₹7 ஆக உள்ள நிலையில், டீசல் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவதால் உற்பத்திச் செலவு யூனிட்டுக்கு ₹16 முதல் ₹30 வரை உயர்ந்து, தொழிற்துறை பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.