குஜராத் அணிக்கு செல்கிறாரா நூர் அஹ்மது? சிஎஸ்கே அணியில் ரபாடா! உண்மையில் நடப்பது என்ன? | Reports Claim CSK and Gujarat Titans in Talks Over Kagiso Rabada – Noor Ahmad Swap Deal

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

சென்னை: சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையில் டிரேட் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. குஜராத் அணியில் இருந்து ரபாடாவை சிஎஸ்கே அணிக்கும், சிஎஸ்கே அணியில் இருந்து நூர் அஹ்மதுவை குஜராத் அணிக்கும் டிரேட் செய்ய பேச்சுகள் நடப்பதாக பதிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

ஐபிஎல் தொடருக்கான ரிடென்ஷன் பட்டியலை வெளியிட இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. ஏற்கனவே ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துவிட்டன. இனி சில டிரேட் பேச்சுகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சிஎஸ்கே அணி டிரேட் பேச்சுவார்த்தையில் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

CSK

ஏற்கனவே லிவிங்ஸ்டன் மற்றும் ஜேக் எட்வர்ட்ஸ் ஆகியோர் டிரேட் செய்யப்பட்ட போதே, இன்னும் 4 புகைப்படங்கள் மறைக்கப்பட்டிருந்தன. சிஎஸ்கே அணிக்கு ஒரு இந்திய இடதுகை ஸ்பின்னர், ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் கட்டாயம் தேவையாக இருக்கிறது. அக்சர் படேலை டெல்லி அணி டிரேட் செய்ய வாய்ப்பில்லை என்று கூறிவிட்டது.

இதனால் அடுத்ததாக சிஎஸ்கே அணி குஜராத் அணியுடன் டிரேட் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக சில பதிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி குஜராத் அணியில் இருந்து ரபாடாவை சிஎஸ்கே அணிக்கும், சிஎஸ்கே அணியில் இருந்து நூர் அஹ்மதுவை குஜராத் அணிக்கும் டிரேட் செய்ய பேச்சுகள் நடப்பதாக கூறப்படுகிறது.

ரபாடாவை வாங்க சிஎஸ்கே அணி நீண்ட காலமாகவே ஆர்வம் காட்டி வருகிறது. ஒவ்வொரு மெகா ஏலத்திலும் ரபாடாவுக்கு சிஎஸ்கே அணி போட்டி போடும். ஆனால் குஜராத் அணி ரபாடாவை விட்டுக் கொடுக்குமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் நூர் அஹ்மது குஜராத் அணிக்கு தேவையா என்ற கேள்வி உள்ளது. ரஷித் கான் முன்பை போல் விக்கெட் வீழ்த்த முடியவில்லை என்றாலும், அவர் பிளேயிங் லெவனில் கட்டாயம் இடம்பெறுவார்.

அதேபோல் குஜராத் அணியில் பட்லர், ரபாடா, ரஷித் கான் மற்றும் ஹோல்டர் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுவது உறுதி. அவர்களுக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனின் தேவை இருக்கிறது. இதனால் சிவம் துபேவை டிரேட் செய்ய முன் வந்தால், குஜராத் அணியிடம் இருந்து சில வீரர்களை கைப்பற்ற முடியும். ஆனால் சிவம் துபேவை சிஎஸ்கே அணி விட்டுக் கொடுகக் வாய்ப்பு இல்லை.

இதனால் இந்த டிரேட் பேச்சுகள் வெற்றிகரமாக முடியுமா என்பது சந்தேகம் தான். இருப்பினும் சாய் கிஷோரை வாங்க சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டி வருகிறது. எந்தவித பிரதிபலனும் இல்லாமல் சாய் கிஷோர் குஜராத் அணி விட்டுக் கொடுக்க வாய்ப்பில்லை. இந்திய மிடில் ஆர்டர் வீரரை விட்டுக் கொடுத்தால், சாய் கிஷோரை கொடுக்க குஜராத் அணி முன் வரும் என்றும் கருதப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *