“சீதா ராம்… சீதா ராம்!” – சேவாக்குடன் போட்டியின் கடைசி நிமிடங்களை பகிர்ந்த மகன் ஆர்யவீர் / “Sita Ram, Sita Ram”: Aryavir Shares Last Moments with Father Virender Sehwag

Spread the love

பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான இறுதிப்போட்டி… 361 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது… தந்தையிடம் மனம் திறந்த 15 வயது ஆர்யவீர்!

இந்திய கிரிக்கெட்டின் அதிரடி ஆட்டக்காரராக அறியப்பட்ட வீரேந்திர சேவாக், தற்போது தனது மகன் ஆர்யவீரின் கிரிக்கெட் திறமையைக் கண்டு பெருமிதத்தில் இருக்கிறார். 2026-ம் ஆண்டு U-19 ஆசியக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடிய ஆர்யவீர், இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றியுள்ளார். ஆனால், இந்த வெற்றிக்குப் பின்னால் அவர் அனுபவித்த பதற்றம் குறித்த உரையாடல்தான் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

கடைசிப் பந்துவரை நீடித்த பரபரப்பு!

நவம்பர் 14-ம் தேதி ஓமனில் நடைபெற்ற U-19 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 337 ரன்கள் குவித்தது. 338 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி, கடைசிப் பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய ஆர்யவீர் 61 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் 361 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்த வீரராகவும், தொடரின் சிறந்த வீரராகவும் (Player of the Tournament) தேர்வு செய்யப்பட்டார்.

“சீதா ராம்’ என்று ஜபித்தேன்!

இந்த வெற்றிக்குப் பிறகு தந்தை வீரேந்திர சேவாகுடன் வீடியோ அழைப்பில் பேசிய ஆர்யவீர், கடைசி ஓவரில் ஏற்பட்ட பதற்றத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“கடைசி ஓவரின்போது நான் ‘சீதா ராம்… சீதா ராம்…’ என்று தொடர்ந்து ஜபித்துக்கொண்டிருந்தேன். எப்படியாவது ஒரு பவுண்டரி கிடைக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். கடைசிப் பந்தில் அது நடந்துவிட்டது” என்று அவர் கூறினார்.

மேலும், பாகிஸ்தான் ரசிகர்களே ‘சேவாக்… சேவாக்…’ என்று முழக்கமிட்டதைக் கேட்டு ஆச்சரியமடைந்ததாகவும் தெரிவித்தார்.

மகனின் இந்த அனுபவத்தைக் கேட்ட வீரேந்திர சேவாக், அந்த வீடியோ உரையாடலைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கோப்பையும் விருதுகளும் ஒருபுறம் இருந்தாலும், மகனுடன் பகிர்ந்துகொண்ட இந்தத் தருணம் தனக்கு மிகவும் சிறப்பானது என்ற உணர்வையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *