கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் | Gummidipoondi Minor Assault Case: Tiruvallur Police Clarify Only One Accused Involved, Deny Gang Sexual Assault Claims

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் ஒருவர்தான் குற்றவாளி என திருவள்ளூர் மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட சிறுமியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

Gummidipoondi

இச்சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் பொய்யான செய்திகளை எந்த ஒரு ஊடகத்திலும் பரப்புவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சிப்காட் பகுதி உள்ளது. அங்கு நேற்று மாலை ஒரு வடமாநில தம்பதியின் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனது. இதையடுத்து அந்த குழந்தையை அப்பகுதி முழுக்க தேடி பார்த்த போது அக்குழந்தை முட்புதரில் காயங்களுடன் இருந்தது.

உடனே குழந்தையை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தைக்கு முதலுதவி அளித்த நிலையில் குழந்தையை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.

Gummidipoondi

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையில் அந்தக் குழந்தையை பிஸ்கெட் வாங்கி தந்து அழைத்து சென்று வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்பட்டது.

இந்த சம்பவத்தில் பீகாரை சேர்ந்த பிபின் மஞ்சி (19) என்பவர் கைது செய்யப்பட்டார். மீதமுள்ள மூன்று பேரை போலீஸார் தேடி வருகிறார்கள். குழந்தைக்கு நடந்த சம்பவத்தை கண்டித்து அந்த கிராம மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். அப்போது அவர்களை சமாதானம் செய்ய வந்த போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர்.

இந்த நிலையில் குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும் இந்த வழக்கில் ஒருவர்தான் குற்றவாளி என்றும் காவல் துறை அறிவித்துள்ளது.

இந்த பாலியல் சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டித்து வருகிறார்கள். அந்த வகையில் கனிமொழி தனது கண்டனத்தில் கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ‘பொறுப்பு’ என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?” என கனிமொழி எம்.பி. தற்போதைய தவெக அரசை மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *