கும்மிடிப்பூண்டி: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 3 வயது சிறுமி உயிரிழப்பு; கொதித்தெழுந்த கிராம மக்கள் | gummidipoondi child rape case people held a roadblock protest

Spread the love

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் வளாகத்தை ஒட்டியுள்ள சிறுபுழல்பேட்டை கிராமத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரின் மூன்று வயது பெண் குழந்தை, நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் அருகில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளரான பிபின் மாஞ்சி (வயது 19) என்பவர், குழந்தையை புதர் பகுதிக்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து குழந்தையைப் புதரில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்.

மக்கள் சாலை மறியல்

மக்கள் சாலை மறியல்

இது தொடர்பாகத் தகவல் அறிந்த கிராம மக்கள் பிபின் மான்ஜியைப் பிடித்துத் தாக்கி… கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். புதரிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை, இன்று காலை உயிரிழந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *