குரிந்தர்வீர் சிங்: இந்தியாவின் புதிய அதிவேக மனிதர்! 10.09 விநாடி தேசிய சாதனை Gurindervir Singh: India’s New Fastest Man! National Record of 10.09 Seconds.

Spread the love

பந்தயத்தை முடித்தவுடன், விமர்சகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் கேலி செய்தவர்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, குரிந்தர்வீர் தனது நெஞ்சில் குத்தியிருந்த எண் அட்டையின் (Bib) பின்புறம் எழுதி வைத்திருந்த ஒரு குறிப்பை கேமராக்களுக்கு முன்பு காட்டினார்.

அதில், “Task is not finished yet. 10.10. Wait. I am still standing.” என்று ஐபிஎல் பாணியில் உணர்ச்சிகரமாக எழுதப்பட்டிருந்தது. இது ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு ரசிகர்களையும் சிலிர்க்க வைத்தது. இந்த வெற்றிக்கு தற்போதைய பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹில்லியரின் கடுமையான பயிற்சிகளும் முக்கியக் காரணம்.

குரிந்தர்வீர் சிங்

குரிந்தர்வீர் சிங்

65 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் மற்றும் இந்திய மக்களின் பெருமையாக உருவெடுத்துள்ளதால் இவரை “புதிய ஃபிளையிங் சீக்கியர்” (New Flying Sikh) என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

“100 மீட்டர் ஓட்டம் இந்தியர்களுக்கானது அல்ல” என்ற பல ஆண்டுகால நம்பிக்கையைத் தகர்த்து, 2026 காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதி இலக்கை மிக எளிதாகக் கடந்துள்ளார் குரிந்தர்வீர் சிங்.

தனது மகன் ஒருநாள் ஒலிம்பிக்கில் இந்தியாவின் கொடியை ஏந்தி பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே தந்தை கமல்ஜித் சிங்கின் வாழ்நாள் கனவு. வலிகளையும் விமர்சனங்களையும் உரமாக்கி, இன்று அதிவேக இந்தியனாக உருவெடுத்துள்ள குரிந்தர்வீர் சிங்கை வாழ்த்துவோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *