குருகிராமில் இளம்பெண் சென்ற பைக்கை மோதிய கார்; ராஜஸ்தானில் வைத்து இளைஞரைக் கைதுசெய்த போலீஸ்!

Spread the love

டெல்லி அருகில் உள்ள குருகிராமில் ஷிவானி என்ற பெண் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கல்யான் என்பவர் காரில் அவரை விரட்டிச் சென்றார். ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் வாகனத்தின் மீது மோதிவிட்டு அங்கிருந்து காரில் கல்யான் தப்பிச் சென்றுவிட்டார். அப்பெண் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளத்தில் வைரலானது. இது தொடர்பாக கல்யான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷிவானி கோரிக்கை விடுத்து இருந்தார். `பெண்களை இடித்துவிட்டுச் சென்றால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறார். இது ஒரு கொலை முயற்சி” என்றும் ஷிவானி குறிப்பிட்டு இருந்தார்.

சாலையில் விழுந்து கிடக்கும் ஷிவானி

சாலையில் விழுந்து கிடக்கும் ஷிவானி

ஆனால் ஷிவானி தனது நண்பர்களுடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டும்போது தனது வாகனத்தின் முன்பு வந்து அடிக்கடி வாகனத்தின் வேகத்தை குறைத்ததாக கல்யான் குறிப்பிட்டு இருந்தார். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் குருகிராம் போலீஸார் கல்யான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். ஆனால் , பைக் ஓட்டுபவர் ஆணா அல்லது பெண்ணா என்பது தனக்குத் தெரியாது என்றும், சம்பவத்தின் ஒரு பக்கம் மட்டுமே காணொலியில் முன்வைக்கப்பட்டதாக கல்யான் பேட்டி ஒன்றில் கூறினார்.

மேலும் ஷிவானியின் ஆண் நண்பர் ஒருவர் சம்பந்தப்பட்ட காணொளிகள் ஏன் வெளிவரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ராஜஸ்தானில் உள்ள தௌசா என்ற இடத்தில் கல்யான் கைதுசெய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *