‘தவெக அரசில் அதிமுகவுக்கு 5 அமைச்சரவை துறைகளைக் கேட்கும் சி.வி.சண்முகம் & வேலுமணி!’ – விஜய் என்ன முடிவை எடுக்கப் போகிறார்? |“CV Shanmugam & SP Velumani Seek 5 Cabinet Berths in TVK Government

Spread the love

ஆட்சிக்கு ஆதரவளித்தால் அமைச்சரவையில் பங்கு கிடைக்கும் என்பதாலயே கட்சியை உடைக்கும் அளவுக்கு இருவரும் வேலைகளில் இறங்கியிருக்கின்றனர். பின்னணி பேச்சுவார்த்தைகளின்படியே சி.வி.சண்முகம் அணியினர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர்.

அதற்கு பலனாக அமைச்சரவையில் குறைந்தபட்சமாக 5 இடங்களையாவது சி.வி.சண்முகம் கோஷ்டி எதிர்பார்க்கிறது. தவெக முகாமில் அதிமுகவினரின் அமைச்சரவை எதிர்பார்ப்பு குறித்து இரண்டு விதமான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் அதிமுகவில் அமைச்சரவை எதிர்பார்க்கும் அத்தனை பேர் மீதும் கடந்த காலத்தில் எக்கச்சக்க புகார்களும் சர்ச்சைகளும் இருக்கின்றன. அவர்களை அமைச்சரவைக்குள் கொண்டு வந்துவிட்டு இனி தூய ஆட்சி என எப்படி பேச முடியும்? என்று ஒரு குழு முட்டுக்கட்டை போடுகிறது.

அரசியலில் இதெல்லாம் சாதாரணம். இவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதன் மூலம், எஞ்சியிருக்கும் அதிமுகவினரையும் அதிமுக வாக்குகளையும் நம் பக்கம் ஈர்த்துவிட முடியும் என இன்னொரு தரப்பும் விஜய்யின் காதில் கிசுகிசுத்திருக்கிறது.

5 அமைச்சரவை கூட பரவாயில்லை, ஆனால் முக்கியமான துறைகளை அல்லவா மனதில் வைத்து கேட்பார்கள் என ஒரு தயக்கமும் தவெக முகாமில் நிலவுகிறது” என்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *