குருப்பெயர்ச்சி 2026: குருபகவான் லாபஸ்தானத்தைப் பார்ப்பதால்.! வீடு, பதவி, பணம் – மகரத்துக்கு எப்படி?

Spread the love

உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) வரும் ஜூன் 2-ம் தேதி முதல் 7-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் மரியாதை ஏற்படும் காலம் இது. சொந்தவீடு, பதவி யோகம், பணவரவு எல்லா பாக்கியமும் வந்து சேரும்.

1. குருபகவான் இதுவரையிலும் அவர் 6-ம் இடத்தில் மறைந்து இருந்ததால், எடுத்த காரியங்களில் தடங்கல், வேலை, தொழில், குடும்பத்தில் பிரச்னைகள், மறைமுக எதிர்ப்புகள் என பலவகையிலும் சிக்கித் தவித்திருப்பீர்கள். இனி, அந்த நிலைமை மாறும்.

2. குடும்பத்தில், கணவன் – மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனி நல்லபடியாக நடக்கும். வங்கிக் கடனுதவியுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சொத்துப் பிரச்னைகள் தீரும்.

3. குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், குழப்பங்கள், சஞ்சலங்கள் அனைத்தும் விலகி, புது உற்சாகம் பிறக்கும். அழகு, இளமை கூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். எதிலும் துல்லியமாக திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள்.

4. குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தைப் பார்ப்பதால், வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஏமாற்றங்கள், தாழ்வுமனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள். சொந்த ஊரில் முதல் மரியாதை கிடைக்கும். வீண் பழிகள் விலகும்.

5. குருபகவான் லாபஸ்தானத்தைப் பார்ப்பதால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள்.

மகரம்

6. உங்களின் தைரிய – விரயாதிபதியான குருபகவான், தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால் தைரியம் பிறக்கும். புது முயற்சிகளில் வெற்றி உண்டு. சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள்.

7. பாக்கியாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 19.08.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 26.06.27 வரை குரு பகவான் பயணம் செய்யும் காலத்தில், வருமானம் உயரும். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

8. அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் செலவுகள், அலைச்சல்கள் வரும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

9. வியாபாரத்தில் உங்களின் தனித்தன்மை வெளிப்படும். வராமல் இருந்த கடன்கள் வசூலாகும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார் கள். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். ஹோட்டல், கெமிக்கல், ஏற்றுமதி வகைகளால் லாபம் அடைவீர்கள்.

10. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். வேலைச் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். மேலதிகாரியின் சொந்த விஷயங் களுக்கு ஆலோசனை வழங்கும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி – சம்பள உயர்வுகள் கிடைக்கும்.

11. கணினித் துறையினர் இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள். அயல்நாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். இந்த ராசியைச் சேர்ந்த கலைத்துறையினருக்கு பெரிய நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் படைப்புகள் பேசப்படும்.

Sakthi Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/Com072vzLdf91mdNSBzw27

ஆன்மிகம் மணக்கும் ஆனந்த ஆலயம். சக்தி விகடன் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்த்த; ஆன்மிக திருத்தலங்கள், திருக்கதைகள், ஆன்மிகத் தொடர்கள், ஜோதிடம் முதலான கட்டுரை, வீடியோக்கள் இங்கே உடனுக்குடன்

இணைய க்ளிக் செய்க… https://chat.whatsapp.com/Com072vzLdf91mdNSBzw27

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *