குழந்தைகளுக்கு தினமும் மில்க் ஷேக்… ஆரோக்கியமான காலை உணவுக்கு மாற்றாகுமா? | Is Giving Kids a Daily Milkshake a Healthy Alternative to Breakfast?

Spread the love

உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரின் வழிகாட்டுதலோடு, அவர்கள் பரிந்துரைக்கும் நியூட்ரிஷனல் சப்ளிமென்ட் சேர்த்தும் மில்க் ஷேக்  செய்து கொடுக்கலாம். அதன் மூலம் குழந்தைகளுக்குத் தேவையான புரதச்சத்து  அதிகரிக்கும். குழந்தைகள் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வோடும் இருப்பார்கள். பாலை காய்ச்சாமல் பயன்படுத்தாமல், காய்ச்சி ஆற வைத்து அதையே மில்க் ஷேக் செய்யப் பயன்படுத்த வேண்டும். சரிவிகித உணவு  கொடுக்க  முடியாத நிலையில், புரதச்சத்தும், ஆற்றலும் நிறைந்த மில்க் ஷேக்  நிச்சயம் குழந்தைகளுக்கு உதவும்.  

குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதற்காக செயற்கை மணமூட்டி, நிறமூட்டி, சுவையூட்டிகள், இனிப்புகள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டாம். 

ஜங்க் உணவு சாப்பிட வேண்டும் என்றால் கூடவே ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட்டாக வேண்டும் என பழக்கலாம்.

ஜங்க் உணவு சாப்பிட வேண்டும் என்றால் கூடவே ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட்டாக வேண்டும் என பழக்கலாம்.

குழந்தைகளுக்குப் பிடித்த உணவு என்பதால், உணவுக்கு மாற்றாக அதையே கொடுத்துக் கொண்டிருக்க வேண்டாம். எல்லாவகையான உணவுகளையும் உண்பதற்கு அவர்களைப் பழக்க வேண்டும். 

குழந்தைகளுக்கு ஜங்க் உணவுகளே கொடுக்காமல் இருக்க முடியாது. அதனால் அவற்றை அளவில் குறைத்துக் கொடுக்கலாம். ஜங்க் உணவு சாப்பிட வேண்டும் என்றால் கூடவே ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட்டாக வேண்டும் என பழக்கலாம். ”

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *