குழந்தைகள் தின கொண்டாட்டம்…மாணவர்களுக்கு கேக் வழங்கிய விஜய்…வாழ்த்து அட்டையில் இடம்பெற்ற ஸ்பெஷல் மெசேஜ்! – Kumudam

Spread the love

நவம்பர் 14 ஆம் தேதியில் குழந்தைகள் நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், நவ. 13-ல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குழந்தைகள் தினத்தையொட்டி கொளத்தூரில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கி குழந்தைகள் தினத்தைக் கொண்டாடினார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு இன்று (நவம்பர் 13) வருகை தந்த முதலமைச்சர் விஜய், பெரம்பூர் மடுமா நகர் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பங்கேற்றார்.

அப்போது மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கியதுடன், தனது புகைப்படம் இடம்பெற்ற குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளையும் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். அந்த வாழ்த்து அட்டையில், ‘All is Well… Confident ah irunga’ என்ற வாசகத்துடன் குழந்தைகள் தின வாழ்த்துகளும் இடம்பெற்றிருந்தன.

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 மாணவர்களுக்கு கேக் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் இந்தத் திட்டத்தை கொளத்தூரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *