வீட்டுக்குள் சினிமா… மொட்டைமாடியில் Jacuzzi – மாதம்பட்டியில் வீக் எண்டுக்கான ஒரு கனவு வீடு.! | A House with Jacuzzi in Top of the house

Spread the love

நகர வாழ்க்கையின் இரைச்சலிலிருந்து விடுபட்டு, வார இறுதியில் குடும்பத்துடன் இயற்கையின் மடியில் நேரம் செலவிட வேண்டும் என்ற ஆசைக்கு, கோவை மாவட்டம் மாதம்பட்டியில் வடிவம் கொடுத்திருக்கிறார் ஆர்க்கிடெக்ட் சிங்காரம். 8,500 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் இந்த வீடு, வீடா ரிசார்ட்டா என்று யூகிக்க முடியாத அளவுக்கு இரண்டையும் ஒருசேரத் தருகிறது.

தேவகோட்டையைச் சொந்த ஊராகக் கொண்ட ஆர்க்கிடெக்ட் சிங்காரம், கோவையில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்நாடு காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங்கில் பி.இ சிவில் படித்த பின், பத்து ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில் “கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ட்’ தேர்வை நேரடியாக எழுதி, ஆர்க்கிடெக்ட்டாகப் பணியைத் தொடங்கினார். ‘Ideaa spaace’ நிறுவனம் மூலம் 23 ஆண்டுகளாக இயங்கி வரும் இவரது வடிவமைப்பு, People, Place, Purpose என்ற மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.

சிங்காரம்

சிங்காரம்

ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்த 24 ஆண்டு பழைமையான பலாமரம், மா, நெல்லி, கொய்யா மரங்கள் எதையும் வெட்டாமல், அவற்றுக்கு இடையே வீட்டை அமைத்திருப்பது சிறப்பு. அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் ‘Central Spine’ நடைபாதையும், பகலில் சூரிய ஒளியும் இரவில் நிலவொளியும் விழும் முற்றத்தின் திறந்தவெளி பூஜையறையும் இந்த வீட்டின் அழகைக் கூட்டுகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *