‘கூலி வேலைக்கு வர்றவனோட உசுருக்கு மதிப்பு கிடையாதா?’ – முதல்வரின் பெரம்பூர் தொகுதியில் நடந்த கொடூரம்! |“Does a Daily Wage Worker’s Life Have No Value?” – Brutal Incident in CM’s Perambur Constituency

Spread the love

”நேத்து மதியம் புள்ள செத்துருக்கான். எங்களுக்கு நைட்டு ஏழு மணிக்குதான் தகவலே சொன்னாங்க. அதுவும் போலீஸ் போன் போட்டு விஷயம் எப்படி நடந்துச்சுன்னு தன்மையா கூட சொல்லலை. யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வாய்க்கவே கூடாது. இவ்வளவு ஆபத்தான வேலைன்னா அதைப் பார்க்குறவங்களுக்கு முறையா பாதுகாப்பு கொடுக்கணுமா இல்லையா?

ஒரு மாஸ்க் கூட இல்லாம எப்படி வேலைக்கு இறக்குனீங்க? இந்த மாதிரி வேலைக்கு வர்ற எங்க சனங்களோட உயிரையும் மதிங்க. எங்க புள்ளயோட உசுரு போயிருச்சு. நாங்க இன்னைக்கு நடுத்தெருவுல அழுதுட்டு இருக்கோம். இந்த மாதிரி நிலைமை வேற குடும்பத்துக்கு இனி ஏற்படக்கூடாது. அதுக்கு அரசு ஒரு வழி பண்ணனும்.

இறந்து போன எங்க புள்ளையோட மனைவிக்கு அரசு வேலை கொடுக்கணும். ஒரு வேலை இருந்தா மட்டும்தான் அந்தப் புள்ளை நாளைக்கு இந்தச் சமூகத்துல கௌரவமா பிழைச்சு நிக்க முடியும்” என்கின்றனர் நவீன் குமாரின் உறவுக்காரர்கள்.

பாட்ஷா, நவீன் குமாரின் குடும்பத்தினருக்குத் தலா 30 லட்ச ரூபாய் அரசு சார்பில் இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் ஒப்பந்தத்தாரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் கூறுகிறார்கள்.

அன்றாட கூலிகளின் இப்படியான இறப்புகள் கொடூரமானவை. வளர்ச்சித் திட்டங்களுக்காக பல்லாயிரம் கோடிகளை வாரியிறைக்கும் அரசுகள், ஒரு சாமானிய தொழிலாளியின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்பது பெரும் அவலம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *