தமிழ்நாட்டைப் போல, கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றியையும், ஆட்சியையும் பரிசாக வழங்கிய கேரள மக்கள், இந்த முறை தோல்வியைக் கொடுத்துள்னர்.
இந்த முறை காங்கிரஸிற்கு ஆட்சியை தந்திருக்கிறார்கள் கேரள மக்கள்.
2021 – 2026 காலகட்டத்தில், முதலமைச்சர் உள்பட 21 அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்தனர்.
இதில் இப்போது பினராயி விஜயன் உள்ளிட்ட ஏழு அமைச்சர்கள் மட்டுமே 2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மீதி 16 அமைச்சர்களும் தோல்வியைத் தான் பெற்றுள்ளனர்.
தோல்வியைத் தழுவிய அமைச்சர்களின் லிஸ்ட் இதோ…
வீணா ஜார்ஜ்: சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சரான இவர், ஆரன்முலா தொகுதியில் போட்டியிட்டார். இவர் 18,985 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் வெற்றியை நழுவவிட்டுள்ளார்.
ராஜீவ்: இவர் தொழில்கள் மற்றும் சட்டத் துறை அமைச்சர் ஆவார். களமச்சேரியில் போட்டியிட்ட இவர் 16,312 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.