கே.என்.நேரு மீது ரூ.1,020 கோடி ஊழல் வழக்கு? FIR-ல் பரபர தகவல்|₹1,020 Crore ‘Party Fund’? FIR Names KN Nehru as A-1

Spread the love

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 5), லஞ்ச ஒழிப்புத் துறை திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனை மேற்கொண்டது.

அந்தச் சோதனையின் எஃப்.ஐ.ஆர் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த எஃப்.ஐ.ஆரில் ஏ-1 ஆக கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தபோது, அந்தத் துறை சார்ந்த டெண்டர்களில் ஊழல் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

அதாவது, டெண்டர் விடப்படுவதற்கு முன்பே, தங்களுக்கு வேண்டியவர்களை டெண்டர்தாரர்களாகத் தேர்வு செய்து, ஒப்பந்த மதிப்பில் 7.5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை ‘கட்சி நிதி (Party Fund)’ என்கிற பெயரில் லஞ்சம் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.

லஞ்சம்

லஞ்சம்
சித்தரிப்புப் படம்

இந்த வழக்கில் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மணிவண்ணன், ரவிசந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆரில் வாட்ஸ்அப் சாட்கள், பணக் கணக்கீடுகள் ஆகியவைச் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த ஊழல் மூலம் கிட்டத்தட்ட ரூ.1,020 கோடியை லஞ்சமாக கே.என்.நேரு பெற்றிருப்பதாக எஃப்.ஐ.ஆர் குறிப்பிடுகிறது.

இந்த வழக்கில் இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று எஃப்.ஐ.ஆர் தெரிவிக்கிறது.

இந்தக் எஃப்.ஐ.ஆரை இங்கே டவுன்லோடு செய்யலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *