ஏற்கெனவே, கே.என்.நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்குத் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், இன்று சோதனை நடத்தப்படுவது தெரிந்ததும், தில்லை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டின் முன்பு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமான திமுக-வினர் குவிந்தனர்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் 16-ம் தேதி கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மகனுக்குத் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இந்தச் சோதனை அரசியல் வட்டாரத்தை தாண்டி அவரது குடும்ப உறவுகளுக்கு மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.