விஜய் திடீர்னு வந்தாரு! முருங்கைக்காய் பறிச்சாரு! சரி போகட்டும்னு விட்டு போட்டேன்! தோட்டத்து ஓனர் | Drumstick garden owner says about Vijay visit to his area

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

தாராபுரம்: தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது திடீரென முருங்கைக்காய் தோட்டத்தில் நுழைந்த முதல்வர் விஜய் முருங்கைக்காய்களை பறித்தார். சரி பார்த்துட்டு போகட்டும்னு விட்டுட்டேன் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் ஏற்கெனவே பிரச்சாரம் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வடையவிருந்த நிலையில் விஜய், சத்தியபாமாவை ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார்.

by poll 2026 dharapuram 2026

அந்த வகையில் மாருதி நகர் முதல் மூலனூர் வரை 30 கி.மீட்டர் தூரம் ரோடு ஷோவை நடத்தியுள்ளார். அப்போது மாட்டு வண்டி ஓட்டிபார்த்தார். அது போல் முருங்கை மரங்கள் விவசாயம் செய்யும் பகுதிக்கு சென்று தொரட்டி மூலம் முருங்கைக்காய்களை பறித்தார். வழிநெடுகிலும் மக்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

செல்லும் வழியில் மூலனூரில் வஞ்சியம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். முதல்வர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. வஞ்சியம்மனை வழிபட்டு கோயிலுக்குள் வலம் வந்த விஜய், அங்கிருந்த தங்கத்தேரையும் வழிபட்டார்.

பின்னர் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தார். இந்த கோயில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வரலாற்றின்படி வஞ்சியம்மன், பண்டைய சேர மன்னர்களின் வழிபாட்டு தெய்வமாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் முருங்கைக்காய் தோட்டத்தில் சென்று முருங்கைக்காய் பறித்த போது அங்கிருந்த தொழிலாளர்கள் அவரிடமும், சத்தியபாமாவிடமும் ஒரு கட்டு முருங்கைக்காயை கொடுத்தனுப்பினர்.

இந்த சம்பவம் குறித்து முருங்கைகாய் தோட்டத்தின் உரிமையாளர் கூறியிருப்பதாவது: திடீரென எங்களது முருங்கைக்காய் தோட்டத்தில் விஜய் வந்தாரு. முருங்கைக்காய் பறிச்சாரு, சரி நானும் பார்த்துட்டு போகட்டும்னு விட்டுவிட்டேன்.

இதுவரை நான் விஜய்யை நேரில் பார்த்தது கிடையாது. சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். எங்கள் தோட்டத்திற்கு வந்த போதுகூட நான் அவரை பார்க்கவில்லை. நான் எதற்காக அவரை பார்க்க வேண்டும்? நான் திமுககாரன் என அவர் தெரிவித்தார்.

தவெக பிரச்சார வாகனத்தில் விஜய் ரோடு ஷோ நடத்திய போது மாட்டு வண்டியில் ஏறி சிறிது தூரம் சென்றார். அப்போது கழுத்தில் பச்சை துண்டு அணிந்துக் கொண்டு பயணித்தார். அப்போது தொண்டரிடம் இருந்து நினைவுப்பரிசை வாங்கும் போது மாடு திடீரென மிரண்டது, இதனால் மாட்டு வண்டியில் நின்றிருந்த விஜய் சற்று ஆட்டம் கண்டார். பிறகு மாட்டின் மூக்கணாங்கயிற்றை அருகே இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிடித்துக் கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *