கைடன்ஸ் தமிழ்நாடு சர்ச்சை: தவெக அரசை விமர்சித்த டி.ஆர்.பி.ராஜா!|’Keep Politics Out’: TRB Rajaa’s Message to Guidance Tamil Nadu Staff

Spread the love

கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்திலிருந்து தமிழ்நாட்டின் முதலீட்டு ரகசியங்கள் ஆந்திராவிற்குக் கசிந்துள்ளதாகக் குற்றச்சாட்டு ஒன்று தற்போது எழுந்துள்ளது.

இந்த ரகசியங்களைக் கசியவிட்டது 15 கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தின் ஊழியர்கள் என்றும், இவர்கள் சமீபத்தில் அந்த நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த ராஜினாமா தகவலை மறுத்துள்ளது கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம்.

இது குறித்துத் தமிழ்நாட்டின் முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“GuidanceTN ஒரு விளக்கம் அளித்துள்ளது.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஒட்டுமொத்த சர்ச்சையும் ‘மொத்தமாகப் பணிநீக்கம்’ செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டதைச் சுற்றியே இருந்தது.

ஆனால், அந்த அறிக்கையோ ‘மொத்தமாகப் பதவி விலகல்’ எதுவும் நடக்கவில்லை என்று மறுத்துத் தொடங்குகிறது. இரண்டுமே முற்றிலும் வேறுபட்ட விஷயங்கள்!

இப்போது இது தவறான தகவல் என்பது தெளிவாகிவிட்ட நிலையில், ‘மொத்தமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்’ என்று செய்தி வெளியிட்டவர்கள், உண்மையைத் தெளிவுபடுத்தி ஒரு செய்தி வெளியிடுவார்களா? மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

ஏன் என்று யூகிக்க முடிகிறதா? ஏனென்றால், ஏதோ ‘உளவாளி’ இருப்பதாகச் சொல்லப்பட்ட இந்த ஒட்டுமொத்தக் கதையுமே, தவெக வட்டாரத்தில் உள்ள அரைவேக்காடுகளால் உள்நோக்கத்தோடு திட்டமிட்டுப் பரப்பப்பட்டதாகத் தெரிகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *