” குறுவை போச்சு; சம்பாவும் கருகுது; விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?”- ஸ்டாலின்| dmk stalin slams cm vijay in kaveri water issue

Spread the love

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த மூன்று இடைக்கால மனுக்களில் இரண்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று (நவ. 20) தள்ளுபடி செய்திருக்கிறது.

மேலும், மூன்றாவது புதிய மனு மீதான விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் விஜய்யை விமர்சித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்! காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்? பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்? பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது? விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?

முதலமைச்சர் அவர்களே…அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!

விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்” என்று விமர்சித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *