Business
oi-Vigneshkumar
டெல்லி: இந்தியாவில் அதிக வருமானம் கொண்ட மாநிலங்கள் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. அதில் டாப் 5 மாநிலங்களில் பெரும்பாலும் தென் மாநிலங்களே ஆதிக்கம் செலுத்துகிறது. அதேநேரம் ஏழ்மையான மாநிலமான பீகார் தொடர்கிறது. இந்த முழு லிஸ்ட்டில் தமிழ்நாடு எங்கே இருக்கிறது.. இந்த அதீத வளர்ச்சிக்கு என்ன காரணம் என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
இந்தியாவை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளில் நாம் பல்வேறு துறைகளில் வளர்ந்து வருகிறது. விண்வெளி ஆய்வு, உற்பத்தி, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளை வியக்க வைப்பதாகவே இருக்கிறது. இருப்பினும், உலக வங்கி இன்னுமே இந்தியாவை லோவர் மிடில் வருமானம் கொண்ட நாடு என்ற பிரிவிலேயே வைத்திருக்கிறது.

அதிக வருமானம் கொண்ட நாடுகள்
அதாவது ஒட்டுமொத்தமாக இந்தியாவை பார்க்கும் போது குறைந்த வருமானமே இருக்கிறது. அதேநேரம் அனைத்து மாநிலங்களிலும் இதே நிலைமை என்று சொல்ல முடியாது. நமது நாட்டிலும் சில மாநிலங்கள் அப்பர் மிடில் வருமான வரம்பை எட்டியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் ஐந்து மாநிலங்கள் உலக வங்கி நிர்ணயித்துள்ள அப்பர் மிடில் வருமான வரம்பான 4,636 டாலர் என்ற தனிநபர் வருமானத்தைத் தாண்டியுள்ளன.
அதில் குறிப்பாக நமது நாட்டின் டெல்லி முதலிடத்தில் இருக்கிறது. டெல்லியில் மக்களின் தனிநபர் சராசரி வருமானம் 6,217 டாலராக (₹5,93,100) இருக்கிறது. டெல்லியை தொடர்ந்து கர்நாடகா (5,579 டாலர், அதாவது ரூபாய் மதிப்பில் ₹5,32,230), தெலங்கானா (5,407 டாலர், அதாவது ரூபாய் மதிப்பில் ரூ.5.15 லட்சம்) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தமிழ்நாடு எங்கே
அதைத் தொடர்ந்து நமது தமிழ்நாடு 4வது இடத்தில் வருகிறது. தமிழகத்தில் ஒருவரின் ஆண்டு வருமானம் 5,329 டாலராக இருக்கிறது. அதாவது ரூபாய் மதிப்பில் 5.08 லட்சமாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு அடுத்து குஜராத் 4,734 டாலர் (4.51 லட்சம்) உடன் 5வது இடத்தில் வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த தனிநபர் வருமானம் 2,760 டாலராக (ரூ.2.6 லட்சம்) உள்ள போதிலும், இந்த 5 மாநிலங்களில் இதை விட இரண்டு மடங்கு வருமானம் அதிகமாகவே இருக்கிறது. இது இந்த 5 மாநிலங்களின் முக்கியமான சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
இந்த லிஸ்டில் மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் இந்த பட்டியலில் சேர சான்ஸ் இருந்தது. ஆனால், மிகக் குறைந்த வித்தியாசத்தில் மிஸ் ஆகிவிட்டது. உதாரணமாக மகாராஷ்டிராவின் தனிநபர் வருமானம் 4,628 டாலராக இருக்கிறது. வெறும் 8 டாலர் வித்தியாசத்தில் தவறவிட்டுள்ளது. அதேபோல ஹரியானாவில் 4,627 டாலர், கேரளாவில் 4,610 டாலராக வருமானம் உள்ளது. இந்த இரு மாநிலங்களுமே நூலிழையில் இந்த வரம்பை எட்ட முடியாமல் போனது.
ஏழை மாநிலங்கள்
மறுபுறம் இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலங்கள் என்று பார்த்தால் பீகார் தான் இருக்கிறது. இன்னுமே பீகாரில் ஒருவரின் தனி நபர் வருமானம் வெறும் 984 டாலராக மட்டுமே உள்ளது. அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் (1,403 டாலர்) மற்றும் ஜார்கண்ட் (1,470 டாலர்) உள்ளன. பெரும்பாலும் வட மாநிலங்களில் இன்னுமே வருமானம் மிக குறைவாகவே உள்ளது. இந்த மாநிலங்களின் வருமானம் என்பது நேபாளம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் சராசரி வருமானத்தை விடவும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990கள் வரை, அதாவது உலக மயமாக்கலை நாம் ஏற்றுக் கொள்ளும் வரை, இந்தியாவின் எந்தவொரு பெரிய மாநிலமும் நடுத்தர வருமான நிலையைத் தொடவில்லை. ஆனால், உலகமயமாக்கலை சரியான வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட மாநிலங்கள் கடந்த 30 ஆண்டுகளில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளன. குறிப்பாக கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் தனிநபர் வருமானம், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளை விட அதிகமாக உள்ளன.

