வயநாட்டில் பினராயி விஜயன் ஆய்வு… மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை… – Kumudam

Spread the love

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் இன்று  நேரில் பார்வையிட்டுள்ளார்.

வயநாடு மாவட்டம் மெப்பட்டியில் தனியார் நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறுகின்ற பகுதிகளில் செவ்வாய்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் தற்போது வரைக்கும் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள நிலையில் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேசிய மீட்பு படையினர் தீவிரமான தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களையும் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

அவருடன் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்கள் எம்.வி. கோவிந்தன் மற்றும் எம்.வி.ஜெயராஜன் ஆகியோரும் உடன் இருந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமுக்கு சென்ற பினராயி விஜயன் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களின் நலம் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்றிந்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *