கொண்டாட்டம் நமக்கு… கழிவுகளை அகற்றும் சுமை இவர்களுக்கு! பிரித்துக் கொடுப்போம், பாரம் குறைப்போம் / Day after diwali its tough days for sanitary staffs

Spread the love

கல்லிடைக்குறிச்சியில் பணிபுரியும் பெண் தூய்மைப் பணியாளர்களிடம் பேசியபோதும், பண்டிகைக் காலங்களில் வேலை நேரம் மாறுபடுவதாகத் தெரிவித்தனர்

வழக்கமான நாட்களில் காலை 6 மணிக்கே பணியைத் தொடங்கும் இவர்கள், வீடுகள் மற்றும் கடைவீதிகளில் குப்பைகளைச் சேகரிக்கின்றனர். தீபாவளி நேரத்தில் பட்டாசுக் கழிவுகள் அதிகமாகச் சேர்வதால் அவற்றைச் சேகரித்து அகற்றுவது கூடுதல் சிரமமாகிறது.

கொண்டாட்டத்துக்கு முன்பே முடிக்க வேண்டிய வேலை!

தீபாவளி நாளில் முழுமையான விடுமுறை கிடைப்பதில்லை. தூய்மைக் காவலர்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருந்தாலும், தூய்மைப் பணியாளர்கள் குறைந்தபட்சம் அரை நாளாவது பணிக்குச் சென்றுவிட்டுத்தான் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை இருப்பதாகத் தெரிவித்தனர்.

 தூய்மைப் பணியாளர்கள்

தூய்மைப் பணியாளர்கள்

பணியாளர்கள், பண்டிகை நாட்களில் வேலை நேரம் அதிகரிப்பதையும் குறிப்பிட்டனர்.

குப்பைகளைச் சேகரிப்பது மட்டுமின்றி, அவற்றில் உள்ள பல்வேறு கழிவுகளைத் தனித்தனியாகப் பிரிப்பதும் இவர்களின் பணியில் அடங்கும்.

பணியாளர்கள் கூறுகையில், மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்துக் கொடுக்க வேண்டும் குப்பையைப் பிரித்துக் கொடுத்தால் சிரமம் குறையும்! என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.

தீபாவளி என்பது பலருக்கும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாள். ஆனால், அந்த மகிழ்ச்சிக்குப் பிறகு வீதிகளைச் சுத்தப்படுத்தும் பணியும் அவசியமாகிறது. நாம் கொண்டாடும் பண்டிகையின் மறுநாள், சுத்தமான தெருக்களைக் காண்பதற்குப் பின்னால் இவர்களின் உழைப்பும் இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *