`கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள்’ என அநாகரிகமாகப் பேசுகிறார். அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே ‘நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலையைத்தான் அவர்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று விராலிமலை விஜயபாஸ்கர் மற்றும் கரூர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரையும் விமர்சிக்கின்றனர். முதலமைச்சர் விஜய் கீழ்த்தரமான அரசியல் பேச்சுகளைப் பேசி வருகிறார். அவர் இப்படியே தொடர்ந்தால் நாங்களும் பேசவேண்டி வரும்.
கரூரில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களை அரசு எடுத்துக்கொண்டது போலவும், அது தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் அளிப்பது போலவும், அதை ஏற்று முதல்வர் விஜய், நிலங்களை ஏழைகளுக்குக் கொடுப்பது போலவும் 10-ம் தேதி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆனால், 9-ம் தேதியே இதற்கான அரசு ஆணை (GO) வெளியிடப்பட்டுவிட்டது.

ஆளுநரிடமும், உரிய அமைப்புகளிடமும் புகார் அளிப்பது சட்டப்பூர்வ நடவடிக்கைக்கான முதற்படியாகும். நீதிமன்றத்தை நாடும் போது “சம்பந்தப்பட்ட தகுதியான அதிகாரியிடம் புகார் அளித்தீர்களா?” என்று கேள்வி எழுப்புவார்கள். சட்டமன்றத்தின் பாதுகாவலராக ஆளுநர் இருப்பதால் அவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சி அமைந்து சில நாள்களே ஆவதால், ஆளுநருக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தி.மு.க சார்பில் நிச்சயமாக நீதிமன்றத்தின் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.