Samantha: `கிளாமருக்கு மட்டும்தான் ஹீரோயினா?; சாதித்துக்காட்டிய மா இன்டி பங்காரம்’ – சமந்தா பதிவு | Actress Samantha posts about the success of the movie Maa Inti Bangaram

Spread the love

அப்போது என் நண்பர் ஒருவர், ‘பி’ சென்டர் (B centre) திரையரங்கு உரிமையாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசினார். நான் அதை கவனித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது அவருக்குத் தெரியாது.

என் நண்பர் அவரிடம், `மா இண்டி பங்காரம் படம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? முதல் நாள் வசூல் எந்தளவுக்கு இருக்கும்?’ என்று கேட்டார்.

அந்தத் திரையரங்கு உரிமையாளர் சற்றும் யோசிக்காமல், `ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தை யாராவது பார்ப்பாங்களா? அவங்க ஒரு பெரிய ஹீரோவோட படத்துல நடிச்சா பரவாயில்லை, கிளாமருக்காக மக்கள் பார்ப்பாங்க. ஆனா, ஒரு ஹீரோயினே முதன்மைப் பாத்திரத்துல நடிக்கும் படத்தை யார் பார்க்க வருவா? யாரும் வரமாட்டாங்க.’ என்றார். படம் வெளியாவதற்கு முன்பு இருந்த பொதுவான பிம்பம் இதுதான்.

யாராவது ஒருவர் துணிந்து ரிஸ்க் எடுக்க முன்வரும்போதுதான் உண்மையான மாற்றம் தொடங்கும் என்று நான் நினைக்கிறேன். பெரும்பாலான நேரங்களில் அந்த முயற்சிகள் பலன் தருவதில்லை. ஆனால், எப்போதாவது ஒருமுறை அந்த முயற்சி ஜெயித்து விடும். எங்களைப் பொறுத்தவரை, இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது. இது இன்னும் பெரிய மாற்றங்களுக்கான ஒரு தொடக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *