“கொலை, பாலியல் வன்கொடுமை என மிரட்டப்பட்டேன்” – வெளிப்படையாக பேசிய நடிகை பார்வதி திருவொத்து! | Challenges faced by actress Parvathy due to various reasons, including her political stance.

Spread the love

நான் ஒன்றும் பெரிய காரியத்தைச் செய்துவிடவில்லை. சிறிதளவேனும் அதிகாரமும் செல்வாக்கும் கொண்ட ஒரு நபர் செய்ய வேண்டிய மிக அடிப்படையான, கண்ணியமான விஷயத்தையே நான் செய்கிறேன்.

அதேவேளையில், இந்தப் பயணம் எளிதானதாகவும் இருக்கவில்லை. எனது வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும், எனது வலுவான குரல் காரணமாக என்னை ஒடுக்க அல்லது அழிக்க முயன்ற சக்திகள் என்னை அச்சுறுத்தும் அளவுக்கு வலிமையானவையாக இருந்த தருணங்கள் உண்டு.

பார்வதி திருவொத்து

பார்வதி திருவொத்து

இருப்பினும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அடங்கிய வலுவான ஆதரவு வட்டம் எனக்கு இருப்பதால், அவர்கள் துணையாக நின்று தன்னை முன்னோக்கிச் செல்ல வைக்கிறார்கள்.

அன்பும் புரிதலும் மிக்க அம்மா – அப்பா, அருமையான உரையாடல்களைப் பகிர்ந்துகொள்ளும் சகோதரன் ஒருவன் இருக்கிறான். அவன் எனக்கு ஒரு சிறந்த நண்பனைப் போன்றவன். நான் துன்புறுத்தப்பட்டபோதும், தாக்கப்பட்டபோதும், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை மிரட்டல்களை எதிர்கொண்டபோதும் என்னுடன் உறுதியாக நின்ற நண்பர்கள் பலர் உள்ளனர்.

என்னைக் காக்க ஒரு பாதுகாப்புக் கவசமாக ஒன்றிணைந்து நின்ற பெண்களின் சமூகம் ஒன்றும் எனக்கு இருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *