Mouni Roy: “நான் லெஸ்பியனா?” – விவாகரத்துக்குப் பிறகான வதந்தி குறித்து நடிகை மௌனி ராய்!| Actress Mouni Roy has clarified the rumors surrounding her divorce.

Spread the love

நாகினி தொடர் மூலம் தமிழ் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றவர் நடிகை மௌனிராய். இவர் தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் தொழிலதிபர் சூரஜ் நம்பியார் என்பவருக்கும் – நடிகை மௌனி ராய்-க்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் (மே) சூரஜ் – மௌனி ராய் இருவரும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் இருவரும் தனித்தனியே தங்கள் பாதையைத் தேர்வு செய்வதாகத் தெரிவித்து, விவாகரத்தை அறிவித்தனர். ஆனால் இந்த விவாகரத்துக்குப் பிறகு பல்வேறு வதந்திகள் பரவின.

அதற்கு விளக்கமளிக்கும் வகையில், சமீபத்தில் நடிகை மௌனிராய் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேட்டியளித்திருந்தார்.

நடிகை மௌனி ராய்

நடிகை மௌனி ராய்
instagram

அந்தப் பேட்டியில், “எப்போதும் எனக்கு துணையாக, ஒரு பாறை போல உறுதியாக நின்ற நண்பர்களும் குடும்பத்தினரும் எனக்கு அமைந்திருப்பதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று உணர்கிறேன். எப்போதும் எனக்கு ஆதரவாகச் சிறந்த பெண் நண்பர்கள் இருந்துள்ளனர்.

என் வாழ்வின் நல்ல, கெட்ட மற்றும் கடினமான கட்டங்களில் அவர்கள் என்னுடன் இருந்திருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் உங்களை ஊக்குவிக்கும் பெண்களைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் என் பெண் நண்பர்கள் சிறந்தவர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *