கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கிறது? MGM வெளியிட்ட மருத்துவ அறிக்கை | How is V.S.Babu’s health condition? MGM hospital releases bulletin

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது என எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு லேசான மூச்சுத்திணறல் காரணமாக எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

vs babu chennai

அவரது உடல்நிலையை பலதுறை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சையும் மூச்சுத்திணறலை சரி செய்வதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. எனினும் அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளது.

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொண்டார். கூட்டத் தொடர் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

vs babu chennai

இந்த நிலையில் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவருக்கு நேற்று இரவு திடீரென லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *