‘கோணல் மூஞ்சி முதல்வர்; தூங்கு மூஞ்சி அரசு!’ – மாமன்றத்தில் கொந்தளித்த திமுக கவுன்சிலர்! |’Crooked-Faced CM, Sleepy Government!’ – DMK Councillor Lashes Out at Chennai Corporation Council Meeting

Spread the love

இதைக் கண்டித்து திமுக கவுன்சிலர் சிற்றரசு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பேசிய அதியமான், ‘ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செய்ய வேண்டிய தூர்வாறு பணிகளை செய்யவே இல்லை. நான் மாமன்றத்திலேயே முறையிட்டு விட்டேன். அப்படியிருந்தும் வேலை நடக்கவில்லை என்பதால்தான் போஸ்டர் அடித்தேன். ஆனால், இந்த மைனாரிட்டி அரசு என் மீது வழக்கு போட்டிருக்கிறது.

உதயசூரியனுக்கு ஓட்டுப் போட வேண்டும் என நினைத்தவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்ததால்தான், இன்றைக்கு அவர்களின் ஆதரவோடு இந்த மைனாரிட்டி அரசு ஓடிக் கொண்டிருக்கிறது.

திமுகவின் கூட்டணி கட்சிகளின் ஆதரவால்தான் முதல்வர் அந்த இருக்கையில் இருக்கிறார். நம்மால்தான் இந்த தற்குறி அரசு, தூங்குமூஞ்சி அரசு ஆட்சியில் இருக்கிறது. மாநகராட்சி ஆணையர் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை.

முதல்வர் கோணலாக மூஞ்சை வைத்துக் கொண்டு உட்காந்திருக்கிறார். ஆணையரின் முகம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இவரும் முதல்வர் போல பல கேள்விகளுக்கும் சம்பந்தமில்லாமல்தான் பதில் கூறுகிறார்’ எனப் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *