கோவில் வளாக கடைகளில்  பூஜை பொருட்கள் விலைப்பட்டியல் கட்டாயம்: இந்து சமய அறநிலையத்துறை  – Kumudam

Spread the love

இந்து சமய அறநிலைத்துறைக்குள் இயங்கக்கூடிய கோவில் வளாகத்தில் விற்கப்படும் பூஜைப்பொருட்கள் விலை அதிகமாக விற்கப்படுவதாக தொடர்ந்து பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோயில்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவுக்களை பிறப்பித்து வருகிறார். 

இதுதொடர்பாக அனைத்து கோவில் நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்ட சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அனைத்து கோவில்களின் வளாகங்களில் இயங்கும் கடைகளிலும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பூஜை பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். சுத்தமான தரமான பொருள்கள் விற்பனை செய்வதை கடைக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும். பூஜைப் பொருள்களின் விலைப் பட்டியலை பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. பிளாஸ்டிக் பைகளில் பூஜைப் பொருள்களை அடைத்து விற்பனை செய்யக் கூடாது. மஞ்சள் துணிப் பையை மட்டுமே பொருள்களை வழங்க வேண்டும். பக்தர்கள் கேட்காத பொருட்களை வாங்கச் சொல்லி கடைக்காரர்கள் வற்புறுத்தக்கூடாது. கோவிலுக்கு வெளியே வழித்தடங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து பூஜைப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது. கடைகள் சுற்றியும் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *