கோவையில் திறக்கப்படாத டாஸ்மாக் கடைகள் – காரணம் என்ன?

Spread the love

கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்கக் கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 100க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மதியம் 12 மணிக்குத் திறக்க வேண்டிய டாஸ்மாக் கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்காவிட்டால், சஸ்பெண்ட் செய்வோம் என் கூறியதை கண்டித்து, அதிகாரிகளை சூழ்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

அப்போது பேசிய டாஸ்மாக் ஊழியர்கள், “விற்பனை செய்யும் மதுபாட்டில்களை ஒன்றுக்கு, மூன்று முறை ஸ்கேன் செய்ய வேண்டியுள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய பாட்டில்களில் ஸ்டிக்கரை சேகரித்து, மீண்டும் பத்து ரூபாய் அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதால் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதமும், காலதாமதமும் ஏற்படுகிறது. ஏற்கெனவே பணியாளர் பற்றாக்குறை, இடபற்றாக்குறை போன்றவை இருப்பதால் பணிக்சுமை அதிகரிக்கிறது. இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை” என்றனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

இது குறித்து மண்டல மேலாளர் கோவிந்தராசிடம் கேட்டபோது, “கோவையில் இன்று 70-க்கும் மேற்பட்ட கடைகள் இதுவரை திறக்காமல் உள்ளது. கடைகளை பூட்டிக்கொண்டு கையில் சாவியை வைத்து போராட்டத்தில் ஈடுபடுவது நிர்வாகத்திற்கு எதிரானது.” என்றார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *