கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தச் சம்பத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழக முதல்வர் விஜய், சிறுமி கொலை தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.