கோவை சிறை வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதி; பவானியில் கைது; பின்னணி என்ன? | Prisoner who escaped from Coimbatore prison complex arrested

Spread the love

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற பரபரப்பு அடங்காத நிலையில், கோவை சிறை வளாகத்தில் இருந்து ஒரு கைதி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு வழிப்பறி வழக்கு தொடர்பாக ராகவன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, கடந்த 31ம் தேதியன்று சிறையில் அடைப்பதற்காக காவல் துறையினர் அழைத்து வந்தனர்.

அப்போது கோவை மத்திய சிறை வளாகத்தில் பாதுகாப்பிற்காக வந்த காவலர்களைத் தள்ளிவிட்டு விட்டு ராகவன் தப்பியோடினார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பந்தயசாலை காவல் துறையினர் தேடி வந்தனர். இது தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ட்ரோன் கண்காணிப்பு, சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் வாகனச் சோதனைகள்  உதவியுடன் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் ராகவனை தேடி வந்தனர்.

இதனிடையே அன்னூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அப்துல் முத்தலிப், தலைமை காவலர் ரஞ்சித் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் உட்பட 4 பேர் பணியின்போது கவனக்குறைவாக இருந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 3 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் பவானிசாகர் பகுதியில் பதுங்கியிருந்த ராகவனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *