டாடா குழும மோதல்: நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன?|Tata Family Feud: What Did Nirmala Sitharaman Say?

Spread the love

டாடா குழுமத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடாவிற்கும் இடையே பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இது டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனை நீட்டிப்பது தொடர்பானதாகும்.

டாடா குழுமப் பிரச்னையில் மத்திய அரசு தலையிடுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தார்.

நோயல் டாடா, என்.சந்திரசேகரன்

நோயல் டாடா, என்.சந்திரசேகரன்
ChatGPT

இதன் பிறகு, டாடா குழும நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் விருந்து நடந்தது ஏன் என்கிற கேள்வியை ராகுல் காந்தி கேட்டிருந்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுக்கவோ, விளக்கமளிக்கவோ இல்லை.

இந்த நிலையில், டாடா சன்ஸ் விவகாரம் குறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்…

“டாடா குழும விவகாரம் மிக மென்மையாகவும், கவனமாகவும் கையாளப்பட வேண்டிய விவகாரம் என்று நினைக்கிறேன். இங்கு வணிகம் மற்றும் தொழில்சார்ந்த அறிவும், வணிக ரீதியான இணக்கமான சூழலும் இணைந்து செயல்பட வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *