“சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு.!" – வாழ்த்துச் சொன்ன முதல்வர் விஜய், ஸ்டாலின்!

Spread the love

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில், முதல்வர் விஜய் தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் பதில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

திருமாவளவன்  - விஜய்
திருமாவளவன் – விஜய்

சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும். தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட விழைகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *