சடலமாக மீட்கப்பட்ட.. மம்தா பானர்ஜியின் மருமகள்! மேற்கு வங்கத்தில் ஷாக்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்! | TMC chief Mamata Banerjee’s niece found dead at West Bengal home

Spread the love

India

oi-Halley Karthik

கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகள் பிரிஷ்டி முகர்ஜி கட்டக் (28), அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று காலை 9 மணியளவில் ராம்பூர்ஹாட்டில் உள்ள அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் இருக்கும் அறையில் பிரிஷ்டி முகர்ஜியின் உடல் மீட்டகப்பட்டிருக்கிறது.

Mamata Banerjee

குடும்பத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராம்பூர்ஹாட் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரிய வரும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததால், இந்த தம்பதி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், தற்போது மருமகள் தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார்.

பிரிஷ்டி முகர்ஜி இதற்கு முன்பு போல்பூர் உயர்நிலைப் பள்ளியில் குரூப் -சி எழுத்தர் பணியில் சேர்ந்தபோது சர்ச்சையில் சிக்கியிருந்தார். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட பணி நியமன பட்டியலில் இவரது பெரும் இடம் பெற்றிருந்தது. இருப்பினும் அவர் பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே தனிப்பட்ட காரணங்களை கூறி தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டதாக அப்போது கூறப்பட்டது.

கடந்த சில நாட்களாக முன்புதான் திரிணாமுல் காங்கிரஸின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகருமான ஆசிஷ் பானர்ஜி ராம்பூர்ஹாட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவரது தற்கொலை கடிதத்தில், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார். இந்த சோகம் மறைவதற்குள் தற்போது மம்தா பானர்ஜியின் மருமகள் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *