பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
“அதிமுகவும், திமுகவும் விலகி இடைத்தேர்தலில் என்னை பொதுவேட்பாளராக நிறுத்துவார்கள் என்பது குறித்து திமுகவும் முடிவெடுக்கவில்லை.
அதிமுகவும் முடிவெடுக்கவில்லை. நானும் முடிவெடுக்கவில்லை. ஆனால் இந்தப் பேச்சை யார் எடுத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.
தவெக கட்சிகாரர்களும், நிர்வாகிகளும் தான் இதனைத் திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
நான் மட்டுமல்ல என் கட்சி பிள்ளைகள் அனைவரும் பொது வேட்பாளர்கள் தான். சீமானின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று என்னைச் சந்திக்கும் பெரும்பாலானோர் விருப்பம் தெரிவிக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுகிறேன்.