சட்டமன்ற விவாதங்களில் ஆர்வம் காட்டாத உதயநிதி; அப்செட்டில் திமுக எம்.எல்.ஏக்கள்? |Udhayanidhi Shows Little Interest in Assembly Debates; DMK MLAs Upset?

Spread the love

உதயநிதி அதைக் கண்டுகொள்ளவே இல்லை. நேற்று காலையில் 110 விதியின் கீழ் பரந்தூர் விமானத் திட்டம் ரத்து என முதல்வர் அறிவித்தார். திமுக பரந்தூர் திட்டத்தை ஆதரிக்கிறது. ஆனால், முதல்வர் விமான நிலையத் திட்டம் ரத்து என அறிவிக்கையில் அவையில் உதயநிதி இல்லை. திமுக வெளிநடப்பெல்லாம் செய்து தங்கம் தென்னரசு அதைப் பற்றி பேசி முடித்த பிறகுதான் உதயநிதி அவைக்கே வந்தார்.

மேலும், ஒரு கட்சியாகவும் திமுக எம்.எல்.ஏக்களை அவையில் உதயநிதி முறையாக வழிநடத்துவதாகத் தெரியவில்லை. சென்னை மாநகராட்சியில் சொத்துவரி திடீரென மறுமதிப்பீடு செய்யப்பட்டு கட்டணங்கள் உயர்த்தப்பட்டது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

மேயர் பிரியா என்னிடம் ஆலோசிக்காமல் அதிகாரிகளே அந்த முடிவை எடுத்துவிட்டார்கள் எனப் பேசியிருக்கிறார். ஆனால், இந்த விவகாரத்தை எந்த திமுக எம்.எல்.ஏவும் அவையில் எழுப்பவில்லை.

அவையில் பேசிய முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவும் இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளவில்லை. ஸ்கோர் செய்ய வேண்டிய இடங்களில் எல்லாம் உதயநிதி கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறார். அவை நிகழ்வு முழுவதும் நேரலையில் வேறு செல்கிறது. எல்லா மக்களும் எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அது இன்னமும் திமுகவுக்குச் சேதாரத்தைதான் ஏற்படுத்தும். ஏற்கனவே அதிகாரமில்லாமல் தோல்வியின் விரக்தியில் இருக்கும் திமுக எம்.எல்.ஏக்கள் உதயநிதியின் ஆர்வமின்மையால் இன்னும் சோர்வடைந்து போயிருக்கின்றனர். உதயநிதி முழுமையாக அவையில் இருந்து ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு உடனே உடனே பதிலடி கொடுக்க வேண்டும் என்றே திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்பார்க்கின்றனர். உதயநிதி அதைச் செய்ய தயாராக இருப்பதாகத் தெரியவில்லை” என்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *